புதன், 2 மார்ச், 2011

சின்னச்சின்ன வியாதிகள்

முதலில் ஒரு விஷயம், உங்கள் குழந்தை எப்படி வளர வேண்டும் என்று நீங்கள் மட்டும் தீர்மானம் பண்ணுங்கள். ரொம்ப குண்டா இருக்கும் குழந்தை தான் அழகோ, ஆரோக்கியமோ அல்ல. மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து மட்டும் கேளுங்கள். உடனே செயல் படுத்த முற்ப்படாதீர்கள். நம் பாட்டி காலம் வேறு, நம் அம்மாவின் காலமும் வேறு, ஏன் நம் சின்ன வயதில் இருந்தது போலவா இப்போது குழந்தைகள் இருக்கிறார்கள். கால கட்டங்களின் மாறுதலுக்கு ஏற்ப நாம் கண்டிப்பாக மாறித்தான் வேண்டும்.

பொதுவாகவே நாட்டு மருந்துகள் இப்போதைய சுழலில் நன்றாக தெரியாமல் கொடுப்பது நல்லது அல்ல. ஆனாலும் எப்போதும் அலோபதி மருந்தும் நல்லது அல்ல. முடிந்தவரை குறைந்த அளவில் மருந்து கொடுத்து பழகுங்கள்.

காய்ச்சல் : குழந்தைகள் காய்ச்சல் வந்தால் மிகவும் சோர்ந்து போவார்கள். முதலில் அவர்கள் நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணரவைக்க வேண்டும். காய்ச்சல் தான கண்ணு சரியாய் போய்டும், இந்த ரச சதம் சாப்பிட்டு, நல்ல ரெஸ்ட் எடு என்று தான் ஆரம்பிக்கவேண்டும். ஐயோ என்று நாம் டென்ஷன் ஆவதில் அர்த்தம் என்ன?

அவர்களுக்கு மிதமான சூட்டில் உடம்புக்கு குளிக்க செய்து, அவர்களுக்கு பிடித்த சவுகர்யமான ஆடை அணிந்து, ரச சத்தமோ, ரொட்டியோ, பாலோ கொஞ்சம் சாப்பிட கொடுங்கள், மருந்தும் கொடுங்கள். அதை விட முக்கியம் சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சுடு தண்ணீரை ஆற வைத்து அதில் ஜூஸ் பிழிந்து கொடுங்கள். நல்ல காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் நிம்மதியா தூங்கினாலே பாதி சரியாய் போகும்.

மிக சிறிய குழந்தை எனில் உடல் சுடு அதிகம் இருந்தால் ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதன் இரு அக்குளும் தலையும் சேர்த்து சில நிமிடம் வைத்து, பிறகு துடைத்து விடுங்க.

சளி: உண்மைகளில் சளிக்கும் குளிப்பதற்கும் சம்மந்தமே இல்லை. தலயில் ஈரம் இல்லாமல் பார்த்து கொண்டால் போதும். மிளகு , பனங் கற்கண்டு, திப்பலி பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ( செய்முறை தனியாக எழுதுகிறேன்)

மிக சிறிய குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கலாம், மிக பொறுமையாக கொடுக்கணும். இல்லேன்னா ஒரு பெரிய வெற்றிலை எடுத்து சிறிது நல்ல எண்ணெய் தடவி விளக்கு திரியில் லேசாக சூடு பண்ணி குழந்தையின் நெஞ்சில் பற்று போடுங்கள், சளி வெளியில் வாந்தியவோ, மலத்திலோ வெளியே வரும்.

லூஸ் மோஷன் : இது தான் கொஞ்சம் டேஞ்சர் ,முடிந்த வரை டாக்டரிடம் எடுத்து சென்று விடுங்கள்.

வயது வாரியாக பார்க்கலாம்.
அதற்கு முன்: குழந்தைகளை பார்க்கும் அதே கவனத்துடன் நம்மையும் பார்த்துக்கணும்.

இன்றைய டிப்ஸ்: கர்ப்பமாக இருக்கும் பொது, எப்போ தெரியுதோ அப்போதிருந்து moisturex என்னும் கிரீம் வயிற்றில் தடவி வந்தால் வரிவரியான தழும்புகள் இருக்காது. அல்லது விட்டமின் ஈ ஆயில் கூட தடவலாம். பிரசவத்திற்கு பின் இருக்கும் தழும்புகள் உடனே போகாது, ஆனாலும் தினமும் சிறிது நல்லெண்ணையுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து வயிறில் தடவி பிறகு குளித்தால் கொஞ்ச நாளில் போய்விடும்

(அம்மாக்கள் வலைப்பூவில் எழுதியது)

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

//இன்றைய டிப்ஸ்: கர்ப்பமாக இருக்கும் பொது, எப்போ தெரியுதோ அப்போதிருந்து moisturex என்னும் கிரீம் வயிற்றில் தடவி வந்தால் வரிவரியான தழும்புகள் இருக்காது. அல்லது விட்டமின் ஈ ஆயில் கூட தடவலாம். பிரசவத்திற்கு பின் இருக்கும் தழும்புகள் உடனே போகாது, ஆனாலும் தினமும் சிறிது நல்லெண்ணையுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து வயிறில் தடவி பிறகு குளித்தால் கொஞ்ச நாளில் போய்விடும்
//

பிரசவ வரிகள் வருவது ஜெனிடிக்ஸ் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். அது மோசமாகப் போகாமல் வேண்டுமானால் இந்த களிம்புகளும் கஸ்தூரி மஞ்சளும் உதவலாமே ஒழிய வரவேண்டும் என்று ஜீனில் இருந்தால் வந்தே தீரும் என்றும் சொல்கிறார்கள்.

Unknown சொன்னது…

வயது வாரியாக எப்போ பார்க்கப் போறீங்க?

விஜி சொன்னது…

தினேஷ்,

பிரசவ வரிகள் பொதுவாக எல்லாருக்கும் வரும், வயிற்றுப்பகுதி விரிவடைவதால் ஏற்படும் இதை, வரும் முன் காக்கலாம், வந்த பின் போகாது.

கருத்துரையிடுக

என்ன நினைக்கறீங்கன்னு சொல்லிட்டு போங்க :)