ஒரே இட்லி, தோசை நாமே தினம் சாப்பிட யோசிக்கிறோம், ஆனால் குழந்தைகள் மட்டும் நாம் என்ன திணித்தாலும் விழுங்கிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது...# பெற்றோராதிக்கம். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது தேவை பொறுமை,
இன்றைக்கு உணவு முறைகளை பார்க்கலாம்:
கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதம் வரை கொடுக்கணும். அதுவும் பிறந்ததும் வெளிப்படும் சீம்பால் எனப்படும் மஞ்சள் பாலில் குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி உள்ளது. ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடிந்ததும், சிறு கப்பில் வென்னீர் வைத்து ஒரு துணியால் குழந்தையின் உதடுகளை நன்றாக துடைக்க வேண்டும், இல்லாவிட்டால் குழந்தையின் உதடுகள் நாளடைவில் கருத்துபோகும். அதே போல் பால் கொடுக்கும் முன்னும் பின்னும் தாயின் மார்புக்காம்புகளையும் வென்னீரில் துடைக்க வேண்டும், தேவையற்ற நோய்த்தொற்றை தடுக்க உதவும்.பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.6 மாதம் முதல்:
ஆப்பிள் தோல் சீவி குக்கரில் வேக வைத்து சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம். முளை கட்டிய சாது மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவை குடுக்க வேண்டும். முக்கியமா கவனிக்க வேண்டியது ஒரு புது உணவு குடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்கள் வேறு எந்த புது உணவும் அறிமுக படுத்த கூடாது. அப்போதுதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிக கொஞ்சம் அடுத்த நாள் அளவு கூட்டி தர வேண்டும்.
7, 8 மாதங்கள்:
ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சாதம், பால் சாதம் ஆப்பிள், வேகவைத்து மசிக்கப்பட்ட காரட், உருளை கிழங்கு, ரொட்டி பால், உப்பு பிஸ்கட் ஊற வைத்து கொடுக்கலாம். வெறும் பருப்பு சாதமா கொடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுங்கள். பருப்புடன் , காரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்த, சிறிது நெய்யில் சீரகத்தூள், கடுகு, தாளித்து கொடுக்கலாம். பசும்பால் அறிமுகபடுத்துங்கள்.
9. ,10 மாதம்:
இப்போது, இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை, போன்றவைகளை தரலாம்.
11, 12 மாதங்கள் :
நம் வீட்டு நார்மல் சாப்பாட்டு குழந்தைக்கு பழக்கபடுத்துங்கள்.
எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்காதீங்க. அப்பறம் சாப்பிடவே பழகாது. குறைவாக இருந்தாலும் பார்க்கும் போதே சாப்பிட துண்டும் வகையிலும், சத்துள்ள தாகவும் கொடுங்கள். முக்கியமா குழந்தைகள் சாப்பிட ஒரே தட்டு, டம்ளர் வைத்து கொள்ளுங்கள். அதை அடிக்கடி சுட்டு தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். காரம், புளி போன்றவைகளை கொஞ்சம் குறைத்து கொடுங்கள். குழந்தை அதிகம் சாப்பிட வில்லை என்று கவலை பட்டு ஒன்றும் போவதில்லை. உணவு வகைகளை மாற்றி, அடிக்கடி கொடுங்கள்.
உணவை கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். உதாரணமாக இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் அதற்கு ஜீரணம் ஆகாது, பதிலாக இந்த அட்டவணையை கடைபிடித்து பாருங்கள்.
7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தால்:-எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்,
8 மணி - குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்க குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.
8.30 - காலை உணவு - திட உணவாக இருக்கட்டும்
10.30 - தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம்.
12 - திட உணவு
4 மணிவரை எதுவும் தேவை இல்லை. அப்பறம் பால் கொடுங்கள், கூட இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு ரொட்டி துண்டு.
7.30 மணிக்கு முழு திட உணவு கொடுங்கள்.
9 மணி மீண்டும் பால். இதற்க்கு இடையில் தாய்ப்பால், கணக்கே இல்லை.
இப்ப வயிறு நிறைந்து இருக்கும், குழந்தை நடுவில் எழுந்து கொள்ளாது. தேவை இல்லாமல் அதற்கு நடு இரவில் பால் கொடுத்து பழக்காதீர்கள். 8 மாதம் பிறகு வளர்ந்த குழந்தையாக நினைத்தால் எல்லா பழக்கமும் சொல்லி தர முடியும்.
இதெல்லாம் என் சொந்த அனுபவம், என் குழந்தைகள் நடு இரவில் அழுததே இல்லை. காரணம் வயிறு நிறைந்த உணவு நல்ல தூக்கம் கொடுக்கும் தானே?
டிப்ஸ்: அம்மாகளுக்கு பால் கட்டி இருந்தால், ஒரு பாத்திரத்தில் உங்களால் பொறுத்து கொள்ள கூடிய அளவு சுடுதண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரும் வைத்து கொள்ளுங்கள். இரண்டிலும் ஒரு சின்ன டவல் போட்டு இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி துணியை தண்ணீருடன் எடுத்து பத்து போட்டது போல் போடுங்கள். தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் குளிக்கும் போதும் செய்தல், கட்டிய பால் தானாகவே வெளியேறும். பிறகுதான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
3 கருத்துகள்:
எத்தனை வயசு வரைக்கும் தாய்ப்பால் கொடுக்குறது நல்லதுங்கிறதையும் சொல்லிப்போடுங்க. 6 மாதம் வரைன்னதும் ஆறு மாசத்துல நிறுத்திப்போடப் போறாங்க.
அருமை அக்கா
Very useful post.....
கருத்துரையிடுக
என்ன நினைக்கறீங்கன்னு சொல்லிட்டு போங்க :)